கவுதம் மேனனின் மறக்க இயலாத படம் வேட்டையாடு விளையாடு!
உலகநாயகன் கமல்ஹாசன் ,ஜோதிகா நடித்திருந்த படம்.2006 -ல் வெளியான இந்த படத்தில் கமாலினி முகர்ஜி ,பிரகாஷ் ராஜ் ஆகியோரும் நடித்திருந்தார்கள். பாக்ஸ் ஆபீஸ் படம். விமர்சகர்களால் பாராட்டப்பட்ட படம்.
இந்த படத்தின் இரண்டாம் பகுதியை எடுப்பதாக இயக்குநர் கவுதம் மேனன் ஈடுபட்டிருக்கிறார். இதற்கு கமல்ஹாசனும் சம்மதம் தெரிவித்திருக்கிறார். இரண்டாம் பாகத்தில் ஜோதிகா நடிப்பாரா என்பது தெரியவில்லை. அவருக்கென தனி ராஜபாட்டை அமைந்து விட்டது. பெண்களுக்கென முதன்மை இருக்கிற கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறார்.
இதனால் கமல்ஹாசனுடன் நடிப்பதற்கு கீர்த்தி சுரேஷை அணுகியிருக்கிறார்கள்.அவரும் சம்மதம் தெரிவித்து விட்டார் என்கிறார்கள்.