Direction : S. U. Arun Kumar
Production : Vansan Movies
Starring : Vijay Sethupathi, Remya Nambeesan
Music : Nivas K. Prasanna
Cinematography : Dinesh Krishnan
Editing : A. Sreekar Prasad.
Rating 3/5
கதைக்களம்
நேர்மையான இன்ஸ்பெக்டரான விஜய்சேதுபதி, மனைவி ரம்யா நம்பீசனுக்கு அன்பான கணவனாக , மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பாசமுள்ள அப்பாவாக சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அதே சமயம் குற்றவாளிகளிடம் கண்டிப்பு காட்டுவதில் சக போலிஸ் அதிகாரிகளிடையே சைக்கோ என பெயரெடுத்தவர். அசிஸ்டென்ட் கமிஷனர் புரமோஷனுக்கான காத்து இருக்கிறார். இந்நிலையில் அந்த ஊரில் எஸ்.ஐ. ஒருவர் மர்ம கும்பலால் மிக கொடூரமாக எரித்து கொலை செய்யப்படுகிறார். அந்த வழக்கை விஜய்சேதுபதி துப்புத்துலங்கத் தொடங்குகிறார். மிக சாதூர்யமாக செயல்பட்டு எளிதில் குற்றவாளியை நெருங்குகிறார். விசாரணையில் அந்த ஊரில் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து நடத்தி வரும் வாத்தியார் (வேலா ராமமூர்த்தி) தான் இந்த கொலைக்கு காரணம் என தெரிய வருகிறது.. மேலும் ஆள் மாறாட்டத்தில் நடந்த கொலை என்பதையும் கண்டறிகிறார். ஊரே வாத்தியாரை பார்த்து பயந்து நடுங்கும் நேரத்தில் விஜய் சேதுபதி தைரியமாக அவரை ஊரார் முன்னிலையில் கைது செய்து அழைத்து செல்கிறார். இதனால் அவமானம் தாங்காத வாத்தியார் விஜய் சேதுபதியை பழிவாங்க முடிவெடுக்கிறார்.இந்நிலையில், செயின் திருட்டு வழக்கில் காவல் நிலையத்துக்கு அழைத்து வரும் சிறுவர்களை பயமுறுத்தி உண்மையை வரவழைக்க, துப்பாக்கியை காட்டி மிரட்டி விசாரிக்கும் போது, திடீரென சிறுவன் கழுத்தில் குண்டு பாய்கிறது. விஜய் சேதுபதி சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.இதையடுத்து , தன்னைச் சுற்றி நடந்த சதி திட்டத்திற்கு யார் காரணம்? வாத்தியாரின் பழிவாங்கும் திட்டம் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
விஜய்சேதுபதியை வைத்து ‘பண்ணையாரும் பத்மினியும்’ என்ற வித்தியாசமான படத்தை கொடுத்த இயக்குனர் அருண் குமார், மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ‘சேதுபதி’ படத்தைகொடுத்திருக்கிறார். விக்ரமிற்கு ‘சாமி’ படம் அமைந்ததுபோல,சூர்யாவிற்கு ஒரு காக்க காக்க அமைந்தது போல,ராஜாசேகருக்கு இது தாண்டா போலீஸ் அமைந்தது போல விஜய் சேதுபதிக்கு ‘சேதுபதி ‘அமைநதுள்ளது.முதல் முறையாக மிடுக்கான போலீஸ் அதிகாரி வேடம். மீசையை கம்பீரமாக முறுக்கி, ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். படத்திற்கு பெரிய பலம் சேர்த்திருக்கிறது விஜய்சேதுபதியின் பங்களிப்பு.கமர்ஷியல் ஹீரோவுக்கு உண்டான அனைத்து அம்சங்களையும் பிரதிபலித்திருக்கிறார். ‘பீட்சா’ படத்தில் இடம் பெற்றது போல, விஜய் சேதுபதி-ரம்யா நம்பீசன் இருவரின் கெமிஸ்ட்ரி இப்படத்திலும் ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது. ரம்யா நம்பீசனிடம் என்னடி, பொண்டாட்டி!என கலாய்த்து சிலாகிப்பதிலும் சரி! ரொமான்ஸ் கணவனாக வளைய வருவதிலும் சரி! குழந்தைகளுக்கு பொறுப்பான அப்பாவாகவும் நம் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விடுகிறார்..படத்திற்கு பெரிய பலம் சேர்த்திருக்கிறது விஜய்சேதுபதியின் பங்களிப்பு. ரம்யா நம்பீசன் பொறுப்பான குடும்பத் தலைவியாக தூள் கிளப்பியிருக்கிறார்.இரண்டு குழந்தைகளின் அம்மாவாக ரம்யா நம்பீசனுக்கு மிகப்பொருத்தமான வேடம். அவரும் நன்றாகவே செய்திருக்கிறார். ஆனால், ‘சண்டைக்குப் பின் சமாதானம்’ என அவருக்காக உருவாக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் நிறைவு! அடிச்சுட்டு போன அந்தாளு அடுத்த நிமிசமே அணைச்சுக்க ஓடி வருவான் . இதெல்லாம் உனக்கு தெரியாது நீ கிளம்பி வீட்டுக்கு போ என தன அம்மாவிடம் சொல்லும் காட்சி பல வீடுகளில் நடக்கும் காட்சிகள் தான்! பின்னணி இசை கச்சிதம்!அனிருத் பாடியிருக்கும் ‘ஹே மாமா…’ பாடல் மாஸ் ரகம்! தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்திற்குத் தேவையான பங்களிப்பை வழங்கியிருக்கிறது.தேவையில்லாத சில காட்சிகளை குறைத்திருக்கலாமோ என சில காட்சிகள் நமக்கு சலிப்பை ஊட்டுவதையும் மறுப்பதற்கில்லை!படத்தின் இரண்டாம் பாதி, செம விறுவிறு!அதிலும் விஜய் சேதுபதி வீட்டை முற்றுகையிடும் வில்லன் கும்பலை போனிலேயே மிரட்டும் காட்சி தியேட்டரில் ரசிகர்களின் விசில் சத்தம் காதலி பிளக்கிறது.விஜய் சேதுபதியை மாட்டி விட்டது எஸ்,ஐயாக வரும் மூர்த்தியாக இருக்குமோ என்ற என்னத்தை நமக்குள் ஏற்படுத்தும் இயக்குனரின் யுக்திக்கு சபாஷ் போடலாம்.இது போன்ற படத்தில் முதல் பாதியில் ஆங்காங்கே வரும் சின்ன சின்ன டுவிஸ்டுகள், நம் கவனம் ஒரு போலிஸிடம் இருக்கும் போது, அதை அழகாக திசை திருப்பும் காட்சி. மொத்தத்தில் விஜய் சேதுபதி செம ‘கெத்து’ காட்டியிருக்கிறார்.