காஜல் அகர்வால் இந்தியில் நடித்து வரும் படம், மும்பை சாகா. இதில், ஜான் ஆபிரஹாம், இம்ரான் ஹாஸ்மி, உட்பட பலர் நடிக்கின்றனர். சஞ்சய் குப்தா இயக்குகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக, இந்த படத்தின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தெலுங்கு திரையுலகினர் கோரிக்கையை ஏற்று, சில பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் படப்பிடிப்பை நடத்திக்கொள்ள தெலங்கானா அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து சில இந்தி படங்களின் படப்பிடிப்புகளை ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடத்த படத்தயாரிப்பாளர்கள் முடிவு செய்தனர். அதில் ஒன்று, மும்பை சாகா. இந்தப் படத்தின் படப்பிடிப்பை ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் 15 நாட்கள் நடத்தஅபபடக்குழுவினர் திட்டமிட்டனர். நாயகி காஜல் அகர்வால் உட்பட 35 பேர் மட்டும் இதன் படப்பிடிப்பில் பங்கேற்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
ஆனால்,கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் தற்போது கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்ததை அடுத்து நடிகை காஜல் அகர்வால் உட்பட சில தொழில்நுட்பக்கலைஞர்கள் படப்பிடிப்புக்கு வர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.இதனால் மும்பை சாகா படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.இதையடுத்து வேறு வழியின்றி படப்பிடிப்பை தற்காலிகமாக கைவிட்டனர்.
படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது குறித்து சாகா பட இயக்குனர் சஞ்சய் குப்தா.கூறுகையில், மும்பை சாகா படத்தில் நடிக்கும் காஜல் அகர்வால் உட்பட சிலர் படப்பிடிப்புக்கு வர தயக்கம் காட்டியதால், படப்பிடிப்பை ரத்து செய்து விட்டோம் . ‘ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இதனால் இப்பட த்தின் படப்பிடிப்பை மும்பையிலேயே வரும் ஆகஸ்ட்15 ஆம் தேதி முதல் நடத்த முடிவு செய்துள்ளோம் என் கூறியுள்ளார்.