நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் விஜய் வீடுகளுக்கு சமீபத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், நடிகர் அஜித்தின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக இன்று காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார்.
இதையடுத்து,உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் அஜித் வீட்டிற்கு மின்னல் வேகத்தில் மோப்ப நாய் உதவியுடன் சென்று சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் வெடிகுண்டுமிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணையில் இறங்கினர்.
இவ் விசாரணையில் விழுப்புரத்தை சேர்ந்த நபர் ஒருவர் தொலைப்பேசியில் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இவர் ஏற்கெனவே நடிகர் விஜய் வீட்டுக்கு மிரட்டல் விடுத்திருந்தவர் என்பதும், இதுவும் வெறும் புரளி என தெரிய வந்துள்ளது.போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.