கண்கள் என்ன புண்ணியம் செய்தனவோ என வாலிபர் வட்டம் இளைப்பாறும் கவர்ச்சிப் படங்களாகவும், வாலிப வயோதிகர்களுக்கான ஓசோவின் தத்துவங்களாகவும் மாறிப்போனவர் அமலாபால்.
குடும்ப வாழ்க்கையில் நான்காண்டுகள், பழகிப்பார்த்துவிட்டு அதை விட்டு வெளியேறிய பின்னர் புதிதாக தனக்கென திரை வாழ்க்கையை மாற்றிக்கொண்டு அதில் புகுந்து கொண்டார்.
லாக்டவுனில் படப்பிடிப்பு இல்லை. வீட்டுக்குள்ளேயே முடக்கம்.
தனக்கு கைவந்த இனக்கவர்ச்சியை இடமறிந்து தனது சமூக வலைத்தளத்தில் படங்களாக வெளியிடுகிறார். இலவச இணைப்பாக , தத்துவ மழை!
’வாழ்க்கை என்றாலே பந்தயம் என்று நினைத்து பார்க்கும் மனோபாவத்திலிருந்து அனைவரும் மாறவேண்டும். பிரஷர் குக்கர் வாழ்க்கையில் இருந்து வெளியே வாருங்கள். இந்த லாக்டவுன் நேரத்தில் புதிதாக புத்தகம் படிக்க வில்லை என்றோ அல்லது புதிதாக ஏதாவது கற்று கொள்ளவில்லை என்றோ கவலை பட வேண்டாம். இது கற்று கொள்வதற்கும், உற்பத்தியை பெருக்குவதற்குமான நேரம் இல்லை. ரிலாக்ஸ் செய்யுங்கள். ஒருவர் செய்வதையே நாமும் செய்ய வேண்டும் என்று அவர்கள் பின்னாலேயே ஓட வேண்டாம்’ என்று அறிவுரை .
’கனவுகள் பெரிதாகவும், காட்டுத்தனமாகவும் இருக்க வேண்டும் , இது ஒரு போட்டோ ஸ்டோரி . இந்த முதல் அத்தியாயத்தில் தனக்கு உள்ளே இருக்கும் சிறுமிக்கு ஒரு அன்பான கடிதம் எழுதப் போவதாக ‘தனது இன்ஸ்டாகிராமில் அமலாபால் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பதிவில் அவர் தனது சட்டை பட்டனை கழட்டிவிட்டு கவர்ச்சி பொங்க , ஒரு கடிதத்தை எழுதுவது போன்ற ஒரு புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். கவர்ச்சி, தத்துவம் என இரண்டையும் கலந்து கொடுத்து வரும் அமலாபாலின் பதிவுகள் அனைத்தும் வைரலாகி வருகிறது.