லட்சுமிமேனன் .கும்கி தந்த குமரிப்பொண்ணு .கேரளத்து சிங்கார சிட்டுகளில் இவரும் ஒருவர். முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவராக இருந்திருக்க வேண்டியவர்.
பிரபுசாலமனின் ராசியான கையினால்தான் அறிமுகம் ஆனார். சுந்தரபாண்டியன் ,பாண்டியநாடு கொம்பன் ஆகிய படங்களில் நாயகியாகவும் நடித்திருக்கிறார். தல அஜித்தின் தங்கையாக வேதாளம் படத்தில் நடித்தவர் ,நல்ல பாடகியும் கூட.! டி .இமானின் இசையில் பாடியவர்.
இவரது நடிப்பில் உருவாகியுள்ள சிப்பாய்.எங் மங் சங் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கும் நிலையில், கவுதம் கார்த்திக்குடன் இன்னும் பெயரிடப்படாத பட த்தில் நடித்து வருகிறார்.பாவம் வழுக்கி விழுந்து விட்டாராம்.முன்னெல்லாம் வழுக்கிவிழுந்தார் என்றால்வேறு மாதிரியான அர்த்தத்தை உருவாக்கி வைத்திருந்தார்கள். நல்ல வேளை அந்த காலம் கடந்துவிட்டது .
பரதநாட்டிய கலைஞரும் கூட. கேரளாவில் நடனப்பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் நடிகைலட்சுமி மேனன் தனது இன்ஸ்டராகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பரத நாட்டியம் ஆடிக்கொண்டிருக்கும் போது லட்சுமிமேனன் திடீரென தவறி கீழே விழும் காட்சி இடம் பெற்றுள்ளது.இது குறித்து லட்சுமிமேனன்,தரையில் தண்ணீர் இருந்ததை கவனிக்காததால் அவர் தவறி விழுந்ததாக அந்த பதிவில் குறிப்பிட்டுளளார் .லட்சுமி மேனனின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/CA5lgThDlu_/?utm_source=ig_web_copy_link