கலைப்புலி எஸ்.தாணு, எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கும் ‘நையப்புடை’ படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்துக்காக தற்போது நையப்புடை டிரைலர் தயாராகியுள்ளது.இந்த டிரைலரில் எஸ்.ஏ.சியின் வற்புறுத்தலின்பேரில், விஜய்யை மனதில் வைத்து எழுதப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய வசனம் இணைக்கப்பட்டதாம். ‘ஒரு தமிழன் தான் நாட்டை ஆள போறான். அவன் வந்துகிட்டே இருக்கான். இனி அடுத்து தமிழன் ஆட்சிதான் என்ற வசனம் தானாம் அது! இதைக்கண்டு அதிர்ந்து போன கலைப்புலி எஸ்.தாணு,
”நையப்புடை’க்கு பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை. இந்த வசனத்தால் மேலிடத்தின் கோபப்பார்வைக்கு ஆளாகி தெறி, கபாலி படங்களின் ரிலீஸுக்கு பிரச்சனை வந்துவிடக்கூடாது என பதறிய தாணு, உடனடியாக இந்த படத்தின் இயக்குனரை அழைத்து உடனே அந்த வசனத்தை கட் பண்ணிவிடச் சொல்லி விட்டாராம்.
கோடம்பாக்க வட்டாரத்தில் இவ்விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.