“நான் ஆண்களை வேட்டையாடுகிறவளா, காமவெறி பிடித்தவளா ? அட பாவிகளா! என்னுடைய கல்யாண கனவை தகர்த்து விட்டீர்களே ,நாசமாத்தான் போவீங்க!” என்று வயிறெரிந்து சாபமிடுகிறவர் வேறு யாருமில்லை. ‘தலைவி ‘பட நாயகி கங்கனாதான்.!
முச்சந்தியில் நின்று மண்ணை அள்ளித் தூற்றாத குறைதான். மனதில் பதுங்கிக்கிடந்த ஆத்திரம் அத்தனையையும் கொட்டிவிட்டார்.
தனியார் தொலைக்காட்சியில் தோன்றிய கங்கனா ரனாவத் தன்னுடைய வாழ்க்கையை நாசமாக்கியவர்களின் பெயரை சொல்லாமல் குமுறிக் கொட்டினாலும் தொலைக்காட்சியை பார்த்தவர்களுக்கு அவர் சொல்வது ஹிருத்திக் ரோஷன்தான் என்பது தெரிந்து விட்டது.கரண் ஜோகரையும் அவர் மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார்.
“2016-ஆம் ஆண்டு!” –பிளாஷ்பேக் போகிறது சீன் .தொடர்கிறது வாக்குமூலம்.
“தனு வெட்ஸ் மானு படத்துக்குப் பிறகு என்னுடைய கையில் 19 படங்களின் ஒப்பந்தங்கள். அந்த ஆண்டு அதிகப்படங்களுக்கு ஒப்பந்தம் ஆனவள் நான்தான்னு நினைக்கிறேன். அப்பத்தான் என்னுடைய ‘எக்ஸ் ‘முட்டாள்த்தனமான ஒரு கேஸை என் மீது போட்டார்.அது மிகவும் தந்திரமான செய்கையாகும். அதனால் என்னாச்சு ? என்னுடைய வாய்ப்புகள் அத்தனையும் காலி.!ஒரே நாளில் அத்தனை பெரும் பின்வாங்கிட்டாங்க.!
அந்த வாய்ப்புகளை நம்பி நான் முதலீடு செய்திருந்தேன் .பெரிய சங்கடத்தில் மாட்டிக்கிட்டேன். கல்யாணம் பண்ணிக்கலாம் ,குடும்ப வாழ்க்கையில் ஈடுபடலாம்னு நினைச்சிட்டிருந்தேன் .ஆனா என்னை ஆண்களை வேட்டையாடுறவ ,இயல்புக்கு மாறான காம வெறி கொண்டவள்ன்னு தப்பா பிம்பப்படுத்திட்டாங்க. ஆபாசமான படங்களை அனுப்பினாங்க. அவ சூனியக்காரி ,அவ ரத்தத்திலேயே ஊறி கிடக்கு .இப்படியெல்லாம் என்னை அடையாளப்படுத்தினாங்க. நான் அழகானவள்னு புகழப்பட்டவ . என் வாழ்க்கையில் கல்யாணம்கிறதுக்கே வாய்ப்பில்ல .நாசமாச்சு வாழ்க்கை.!” என்று குமுறிவிட்டார்.!