Direction : Shakti Soundar Rajan
Production : Global Infotainment
Starring : Jayam Ravi, Lakshmi Menon
Music : D. Imman
Cinematography : S. Venkatesh
RATING-2/5
ஊட்டியில் டிராஃபிக் போலீஸ் அதிகாரியாக இருக்கும் ‘ஜெயம்’ ரவி தன் அனபு குட்டித்தங்கையுடன் (அனைகா) வாழ்ந்து வருகிறார். ஒரு விபத்தில் டாக்டரான லட்சுமி மேனனை சந்திக்கும் ‘ஜெயம்’ ரவிக்கு அன்றிலிருந்து அவர் மீது காதல் . இந்நிலையில் ஊட்டியில் ஒரு தொழிற்சாலையில் இருந்து அபாயகரமான கெமிக்கல் ஏற்றிச் செல்லும் ஒரு லாரியிலிருந்து கெமிக்கல் கீழே கொட்டி விடுகிறது. அந்த கெமிக்கலை ஒரு நாய் குடிக்க, அதில் உள்ள அபாயகரமான வைரஸ் அந்த நாய்க்குள் விளைவுகளை ஏற்படுத்த, நாய் வெறிப் பிடித்து ஒரு மனிதரை கடித்து விடுகிறது. நாய் கடிபட்ட மனிதனுக்குள் அந்த வைரஸ் பரவ, அவர் ஒரு மனித மிருகமாக மாறி (ஜாம்பி) மற்ற மனிதர்களையும் கடிக்க துவங்க, ஊர் முழுக்க மனித மிருகங்கள் உருவாகிறது. ஜாம்பி பரவல் கட்டுக்கடங்காமல் செல்கிறது.. அதற்கான மருந்து கண்டுபிடிக்க லட்சுமி மேனன் உள்ளிட்ட மருத்துவர்கள் குழுவை ஜெயம் ரவி, தன் தங்கையுடன் கோயம்புத்தூருக்கு அழைத்துச் செல்லும் சூழல் உருவாகிறது. அங்கு ஜெயம் ரவியும் ,அவரது தங்கையும் ஜாம்பி வைரசால் பாதிக்கப்பட அதன் பின் என்ன நடக்கிறது என்பதே பரபரப்பான மீதிக்கதை!
டிராஃபிக் போலீஸ் அதிகாரியாக வரும் ‘ஜெயம்’ ரவி அந்த கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். மனித மிருகங்களிடமிருந்து தன்னையும், தன் தங்கை, காதலி ஆகியோரை காப்பாற்ற அவர் மேற்கொள்ளும் போராட்டங்கள் விறுவிறு, பரபர காட்சிகள்! அதிரடி ஆக்ஷனில் அதகளம் பண்ணியிருக்கிறார் ரவி! டாக்டராக வரும் லட்சுமி மேனன், அவரது காதலனாக வரும் அமித் பார்கவ், ‘ஜெயம்’ ரவியுடன் சக டிராஃபிக் போலீஸ்காரராக வரும் காளி வெங்கட், அரசியல்வாதியாக வரும் ஆர்.என்.ஆர்.மனோகர் ஆகியோரது நடிப்பும் பாராட்டும் படியாக உள்ளது என்றாலும் ,ஹாலிவுட்டில் இதுபோன்ற பல படங்கள் வெளிவந்துள்ளன என்றாலும் அந்த படங்களோடு ஒப்பிடுகையில் இந்த மிருதனை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் அதில் ஓரளவுக்கே வெற்றிபெற்றுள்ளார். கூட்டம் கூட்டமாக மனித மிருகங்கள் வருவது, கடித்து குதறுவது, அவர்களை சுட்டுத் தள்ளுவது என படம் முழுக்க ஒரே துப்பாக்கி சத்தமும், ரத்தம் சிந்துவதுமான வன்முறை காட்சிகள் தான்! இடைவேளைக்கு பிறகு வரும் இதுபோன்ற காட்சிகள் ஓவர் டோஸாக அமைந்து விட்டன. ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள்.திரைக்கதையில் இன்னும் அதிக கவனம் செலுத்தி இருந்தால் இது ரசிகர்களுக்கு வித்தியாசமான ஒரு படமாக அமைந்திருக்கும்!தனி மனிதனாக பெற்ற வெற்றியை ஜெயம் ரவி இதில் தவற விட்டுள்ளார் என்றே சொல்லலாம்.