ஜேசன் சஞ்சய். தளபதி விஜய்யின் மகன். இவரது எதிர்காலம் திரைத்துறை சார்ந்துதான் இருக்கும் என்பது எதிர்பார்ப்பு.
காரணம் இவரது கனடா கல்விப்பயணம். அங்கு சினிமா தொடர்பான கல்வியை கற்றிருக்கிறார். கொரானா காரணமாக உலக நாடுகளின் விமான சேவை நிறுத்தப்பட்டிருந்ததால் ஜேசனால் தாய் நாடு திரும்பமுடியவில்லை.இவரைப்போல பலர் அந்தந்த நாடுகளிலேயே இருக்கவேண்டியதாகிவிட்டது.
இதனால் அவர்களுக்கு தங்குமிடம் ,உணவு தொடர்பான பல சிக்கல்கள்.
தூதரகங்களில் முறையிட்டதன் பேரில் இந்திய அரசு சார்பில் சிறப்பு விமானங்கள் வழியாக அவர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டார்கள். அருகில் இருந்த ஹோட்டல்களில் 14 நாட்கள் தனித்து இருக்க வைக்கப்பட்டனர்.
ஜேசன் சஞ்சய்யும் சென்னை திரும்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் தற்போது வீடு திரும்பிவிட்டதாக சொல்கிறார்கள்.
பல மாதங்களுக்குப் பிறகு மகனைச் சந்தித்ததால் நடிகர் விஜய்யும் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.