சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவரே தன்னுடைய லம்போகினி காரை ஓட்டி சென்ற படம் தற்போது வைரலாகி இருக்கிறது.
படப்பிடிப்புகள் இல்லாததால் மொத்த திரையுலகமும் முடங்கிப் போய்க் கிடக்கிறது .எப்போது திரையலகம் மறுவாழ்வு பெரும் என்பது கொரானாவின் கையில் இருக்கிறது. அந்த கொள்ளை நோய் ஒழிக்கப்படுகிற நிலையில்தான் தியேட்டர்கள் மறுபடியும் திறக்கப்படும் படப்பிடிப்புகள் தொடங்கப்படும். அதுவரை திரிசங்கு நிலைதான்.!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவரது கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டு இருக்கிறார்.அவ்வப்போது போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்து செல்கிறார். இந்த நிலையில் விலையுயர்ந்த லம்போகினி காரினை அவரே சீட் பெல்ட் போட்டுக்கொண்டு மாஸ்க் அணிந்து கொண்டு ஓட்டிக்கொண்டு சென்றிருக்கிறார் .
எங்கே சென்றார்?
மகள் சவுந்தர்யா வீட்டுக்கு சென்றதாக சொல்கிறார்கள்.