கவிப்பேரரசு வைரமுத்துவை பட்டி மன்றப்பொருளாக பார்ப்பதில் சிலருக்கு என்ன சுகமோ .தெரியவில்லை.அந்த மனிதனின் சொல்லடுக்கில் சொக்கிப்போன தமிழர்க்கு இன்னொரு காவியம் தர,மாட்டாரா என்கிற ஏக்கம் இருந்து கொண்டு இருக்கிறது.
தன்னை இனம் பிரித்துக்காட்டுகிற அவசியம் அந்த கவிஞருக்கு இல்லை.
அவர் யார் என்பதை அறிந்து கொண்டதால்தானே மைய ,மாநில அரசுகள் விருதுகள் அளித்து பெருமை படுத்தியிருக்கின்றன.
இந்த நிலையில்தான் அவர் ‘கவிஞனா ,அல்லது பாடலாசிரியனா’ என்கிற வீணான ஆய்வில் இறங்கி அவரை கொச்சைப்படுத்தப் பார்க்கிறார்கள். இதற்கு வைரமுத்துவே பதில் சொல்லியிருக்கிறார் .
“நாட்டின் உயிரும் பொருளும்
மானமும் அறிவும்
இன்னற்படும் இந்த எரிபொழுதில்
நான் கவிஞனா பாடலாசிரியனா
நாவலாசிரியனா நாவலனா
என்று சிலர் வினாவெழுப்புவது வீண்.
நீங்கள் நினைக்கும் இடத்தில் நானில்லை.
நான் வெறும் மொழியாளன்.
வேலையைப் பாருங்கள்;
மனிதவளத்தை மனவளத்தை மாண்புறுத்துங்கள்.”