பாகுபலி நடிகர் பிரபாஷுடன் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிப்பது பற்றி பெரிதாகப் பேசப்பட்டது. ஆந்திர பட உலகினர் பெருமைப்பட்டுக்கொண்டனர். அந்த அளவுக்கு இந்திய அளவில் தீபிகாவுக்கு முக்கியத்துவம் இருக்கிறது,
அவரது செக்சியான உடல் அதிக அளவில் ஆராதிக்கப்படுவதும் ஒரு காரணம். கல்யாணம் ஆனாலும் கட்டுக்குலையாமல் இளமையை காப்பாற்றி வருகிறார்.
தயாரிப்பாளர் பிரியங்கா தத்தா அவரை அணுகியபோது சுலபத்தில் சம்மதிக்கவில்லையாம்.
ஒரு படத்தில் ஹீரோவுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறதோ அதற்கு சமமாக ஹீரோயினுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்கிற கொள்கை உடையவர் தீபிகா படுகோனே!
கடைசியில் 20 கோடி ரூபாய் சம்பளம் என முடிவாகியதாம். இது பிரபாஷுக்கு சமமான சம்பளம் இல்லை என்றாலும் இந்திய அளவில் அதிக ஊதியம் வாங்கியவர் என்கிற பெயர் கிடைத்திருக்கிறது. பிரபாஷுக்கு சம்பளம் 50 கோடி என்கிறார்கள்.