மணிரத்னம் விளம்பரப்படம் எடுத்தால் கூட அதில் நடிப்பதற்கு ‘ஆல் இந்தியா’ லெவலில் பிரபலங்கள் நடிப்பதற்கு தயாராக இருப்பார்கள் என்று பெருமையாக சொல்வது உண்டு.
இது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றுதான் என்றாலும் உண்மை இல்லாமல் இல்லை. அது திரைப்படங்களுக்கு மட்டுமே பொருந்தும். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்கு பெருமளவில் தங்களின் கால்ஷீட்டுகளை தியாகம் செய்துவிட்டுத்தான் தாடி விட்டிருக்கிறார்கள். அதற்கு கல்கியின் காவியம் முக்கிய காரணம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் .உலகநாயகன் கமல்ஹாசன் ஆகிய பெருந்தலைகள் இந்த காவியத்துக்காக பாடுபட்ட கதை தெரிந்த ஒன்றுதான்.
இன்னொரு காரணமும் சொல்லப்பட்டு வருகிறது. சோழப்பேரரசின் மாமன்னனின் கதையை எந்த வகையிலும் சித்தரிக்க முடியாது.சாபம் இருக்கிறது என்பார்கள் .ஆனால் ராஜராஜசோழன் என்கிற பெயரில் அமரர் டிகே சண்முகம் அண்ணாச்சி அவர்கள் வெற்றிகரமாக நாடகம் நடத்திக்காட்டியிருக்கிறார்.
சரி விஷயத்துக்கு வருவோம்.
மணிரத்னம் நவரசா என்கிற பெயரில் 9 இயக்குநர்களை வைத்து வெப் சீரியல்களை 9 பாகமாக வெளியிடுகிறார். இதில் ஒரு பாகத்தில் நடிப்பதற்கு சூர்யா ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்த தொடரில் தமிழ் மட்டுமில்லாமல் பிற மாநிலத்து நடிகர்களையும் நடிக்க வைப்பதற்கு மணிரத்தினம் விரும்பி இருக்கிறார்.
தெலுங்கில் நானி ,நாகசைதன்யா ஆகியோரை அணுகியபோது அவர்கள் நடிக்க மறுத்து விட்டார்கள் .டிஜிட்டல் பிளாட்பாரத்துக்கு நாங்கள் வரமாட்டோம் என்று சொல்லிவிட்டதாக தகவல்.
ஆனால் எதிர்காலமே அந்த பிளாட்பாரத்தையும் நம்பித்தான் நகர்கிறது !