மக்கள் திலகம் தெரியும். மக்கள் செல்வி தெரியுமா?
‘டேனி ‘படத்தின் தயாரிப்பாளர் பி.ஜி.முத்தையா மற்றும் படக்குழுவினர் சேர்ந்து அந்த பட்டத்தை வரலட்சுமி சரத்குமாருக்கு வழங்கியிருக்கிறார்கள். மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான சரத்குமாரின் மகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் எல்.சி.சந்தானமூர்த்தி எழுதி இயக்கியிருக்கும் புதிய திரைப்படம்தான் ‘டேனி’.
சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியிலான இந்தப்படத்தில் வரலட்சுமி சரத்குமார்முக்கிய வேடத்தில் நடிக்கிறார். போலீஸ் அதிகாரி.
இவர் ஏற்கனவே மலையாளத்தில் மம்மூட்டி நடித்த ‘மாஸ்டர் பீஸ்’, தமிழில் அர்ஜுன் நடித்த ‘நிபுணன்’ போன்ற சில திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வரலட்சுமியுடன் சாயாஜி ஷிண்டே, வேல ராமமூர்த்தி, அனிதா சம்பத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர் .
பிஜி மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில்,பி.ஜி.முத்தையா மற்றும் எம். தீபா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி’ஓடிடி’ டிஜிட்டல் தளத்தில் நேரடியாக ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டேனி படம்குறித்து வரலட்சுமி கூறியதாவது,,
“டேனி படத்தில், கொலையை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நானும், எனக்கு துணையாக, டேனி என்கிற நாயும் நடிக்கிறது.
இங்கு தான், இன்னாருக்கு முக்கியத்துவம் உள்ள கதை என, பார்க்கிறீர்கள். ஆனால், வெளிநாடுகளில் அப்படியில்லை. கதைக்கு தான் முக்கியத்துவம் தருகின்றனர். டேனி படமும் கதைக்கு முக்கியத்துவம் தரும் ஒரு படமாக இருக்கும்
இப்படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான படமாகவும் அமையும் என்கிறார்.தமிழ்
ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டீசரில் வரலட்சுமி சரத்குமாரின் பெயருக்கு முன்னால் ‘ மக்கள்செல்வி’ என்னும் அடை மொழி ‘டேனி’ படக்குழுவினரால் கொடுக்கப்பட்டுள்ளது.