தன்னைப் பற்றிய தவறுகளை சுட்டிக்காட்டிய கஸ்தூரி,லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்திரன் மூவரையும் கடுமையான வார்த்தைகளால் அர்ச்சித்தவர் வனிதா விஜயகுமார். இவரது மூன்றாவது திருமணம் முறைகேடானது ,இன்னொரு பெண்ணின் கணவரை அபகரித்தது சட்ட விரோதம் ,சமூக ஒழுக்கக்கேடு என்று சுட்டிக்காட்டிய அவர்களை ஆபாசமான ,கெட்ட வார்த்தைகளால் தரம் தாழ்ந்து திட்டியவர்தான் வனிதா.அவர்களும் எதிர்வாதம் செய்தனர்.
இதன் உச்சக்கட்டமாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுடன் நேர்காணலில் பங்கேற்ற நடிகை வனிதா, அவரை லோக்கல் குழாயடிச்சண்டை பாணியில் பலரும் முகம் சுளிக்கும் வகையில் கடுமையாக தாக்கி பேசினார்.
மேலும் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம், டிவிட்டர் என சமூக வலைதள பக்கங்களிலும் பகிர்ந்தார். இதெற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில் கஸ்தூரி தனியாக யூ டியூப் சேனல் ஒன்றை தொடங்கினார்.
பீட்டர்பால் தன்னுடைய ஆபீஸ் என்று சொல்லி வனிதாவுடன் சேர்ந்து பேட்டி கொடுத்த ஆபிசுக்கே சென்று விட்டார் கஸ்தூரி! உண்மையான அதிபரை பேட்டி எடுத்து ஒளிபரப்பிவிட்டார். இதனால் ஒரே நாளில் பீட்டர்பாலின் வேடம் களைந்து விட்டது.
இந்த நிலையில்தான் நடிகை வனிதா சோஷியல் மீடியா மற்றும் மீடியாவில் இருந்து சில காலம் விலகியிருக்கப் போவதாகஅறிவித்தார் ,
மேலும் வேலை இருக்கு, இதில் இருப்பதால் கோபம்தான் அதிகமாக வருகிறது என்றும் தெரிவித்து, டுவிட்டரில் இருந்து விலகினார் .
இதனை பார்த்த நடிகை கஸ்தூரி, என்னாச்சு? (அ)சிங்கப்பெண் எங்க ஓடிட்டாங்க.. ஏதாவது காக்காவை பார்த்து பயமா அல்லது உண்மையை பார்த்து பயமா? இப்போது உங்களுக்கு தெரியும். நீங்கள் தான் பிக்கஸ்ட் பாஸஸ்! யார் தைரியமானவர் யார் காமெடி பீஸ் என தீர்மானிப்பதற்கு என பதிவிட்டுள்ளார்.மேலும் விஜய் சேதுபதியின் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, என்ன ஆச்சு? என தலைப்பிட்டுள்ளார்.