தங்கள் அபிமான நடிகர் சூர்யாவைப் போலவே அவரது ரசிகர்களும் சமூகச் செயல்பாடுகளில் கவனம் செலுத்துபவர்கள்.
இந்த கொரோனா முடக்க காலத்திலும் சூர்யாவின் ரசிகர்கள் சலசலப்பு இன்றி விளம்பர ஆரவாரமின்றி காரியங்களை நிறைவேற்றி வருகிறார்கள்.
தொடர்ந்து கொண்டிருக்கிற கொரோனாவின் அசாதாரண பொதுமுடக்க காலம் ஜூலை 23தேதி இன்று 115 வது நாளாகிறது.
இத்தனை நாட்களிலும் சூர்யா ரசிகர் மன்றத்தின் ரசிகர்கள் தமிழ்நாடு முழுக்க அனாதைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் உணவு அளித்து வருகிறார்கள். அதுவும் ஓசைப்படாமல். தங்கள் நட்சத்திர நடிகர் சூர்யாவின் 45 வது பிறந்தநாளில் தங்களது தொண்டின் மூலமும் சேவை மூலமும் அசத்த வேண்டும் என்று கருதி அவர்கள் திட்டமிட்டுள்ளார்கள். அதன்படி ஜூலை 23 ,இன்று சென்னையில் 45 ஆதரவற்றோர் இல்லங்களில் உணவு வழங்குகிறார்கள். மற்றும் தமிழ்நாடு முழுவதிலும் வழக்கமாக உணவு வழங்கப்படுகிறது. இப்படி சூரியாவின் 45வது பிறந்த நாளை சேவையின் ஈரத்தோடு கொண்டாடுகிறார்கள்.
சேவை மூலம் இப்படி மன திருப்தி அடையும் ரசிகர்கள் சூர்யா நடித்திருக்கும் ‘சூரரைப்போற்று’ படம் எப்போது வரும் என்று ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள். அந்த படத்தின் டீஸரும் பாடல்களும் வெளியாகி மில்லியன் கணக்கில் வியூஸ்களை அள்ளியி ருக்கின்றன.
‘வெய்யோன் சில்லி…’ பாடலும், ‘மண்ணுருண்டை…’ பாடலும் பெரிய வெற்றி பெற்றுவிட்டன .’ என் சிறுக்கி கிட்ட சீவனத் தொலைச்சிட்டேன்’ வரிகளும் ‘பருந்தாகுது ஊர்க்குருவி;
வணங்காதது என் பிறவி’ வரிகளும் ரசிகர்களின்அன்றாட முணுமுணுப்புகள் ஆகிவிட்டன.
டீஸரும் வெளியாகி அதிரிபுதிரி மில்லியன்கள் வெற்றியில் எகிறிக் கொண்டிருக்கிறது.
மூன்றாவது பாடலான ‘ காட்டுப்பயலே…’ பாடலின் முன்னோட்டமாக , ஒரு நிமிட ஸ்பெஷல் வீடியோ சூரியாவின் பிறந்தநாள் ஜூலை 23இன்று காலை 10 மணிக்கு ,
உலக சூரியா ரசிகர்களை மகிழ்விப்பதற்காக வெளியிடப்பட்டது. பாராட்டுகள் மலையாக குவிந்து கொண்டிருக்கின்றன .இன்றைய சிறப்பு சூர்யாவின் பிறந்த நாள்தான்.நடிகர்களும் தயாரிப்பாளர்களும் வாழ்த்துகளை வாரி வழங்கி வருகிறார்கள்.டிவிட்டர் திணறி வருகிறது.
2D என்டர்டெய்ன்மென்ட், சிக்யா என்டர்டெய்ன்மென்ட் உடன் இணைந்த தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி.வி .பிரகாஷ்குமார் இசையில் உருவாகியுள்ள – சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ படத்திற்காகத் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். விரைவில் நாட்டில் சுமுகம் நிலவும்; படம் திரையில் பரவும்