வணங்கத்தக்க மனிதர் அமிதாப் பச்சன்.
வாலிபத்தில் வந்து போகும் ஈர்ப்புகளை எவரும் தவிர்க்க முடியாது.
பெரியவர் சிவகுமார் சொல்வதைப்போல ‘இதுவும் கடந்து போகும்.’
இன்று இந்தியாவின் உண்மையான உச்சநடிகர் இவர் ஒருவர்தான். பட வசூலை கடந்து மக்கள் மனதில் உயர்ந்து நிற்கிறார்.
இன்று கோவிட் 19 தாக்குதலுக்கு உள்ளாகி அவரும் மகன் அபிஷேக்,மருமகள் ஐஸ்வர்யா ராய் ,பேத்தி ஆராதியா ஆகிய நால்வரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அந்த நிலையிலும் அவர் தன்னுடைய சமூக வலை தளம் வழியாக அற்புதமான செய்தியை வெளியிட்டிருக்கிறார்.
மத ஒற்றுமையை வலியுறுத்துகின்ற சேதி .
“நம் கையிலேயே மதங்களைப் பார்க்கலாம் .இரு கரமும் குவிந்தால் அது பூஜை .அதுவே விரிந்தால் ‘துவா ‘தொழுகை.” என குறிப்பிட்டு விளக்கப்படமும் பதிவு செய்திருக்கிறார்.
இதன் பொருள் ஆளுவோர்க்கும் ஆளப்படுவோர்க்கும் புரிந்தால் சரி.! மத துவேஷம் ஒளியும்.!