பொதுக்கழிப்பறைக்குள் போனால் சாம்பிராணியா மணக்கும்?
ராம்கோபால்வர்மா இலக்கு வைத்து அடிக்கிறார் என்றால் காயப்படாமல் இருக்க முடியுமா? அப்படி ஒரு சிச்சுவேஷன் டோலிவுட்டில்.!
தெலுங்கு தேசத்தில் ‘பவர் ஸ்டார் ‘என்றால் அது பவன் கல்யாண் மட்டுமே.! நம்மூரு பவர் ஸ்டார் அங்கே போயி போஸ்டர் போட்டுக்கொண்டால் சட்டையை கழற்றிவிட்டு அடையாளம் போட்டுவிடுவார்கள் அந்த அளவுக்கு பவனுக்கு பவர் அதிகம்.அரசியல் கட்சி தலைவரும் அவர்தான்.!
இந்த பவர் ஸ்டார் மீது ராம்கோபால்வர்மாவுக்கு என்ன காண்டோ ,பகையோ தெரியவில்லை. புகையை விட்டுக்கொண்டே இருப்பார்.
தற்போது ‘பவர் ஸ்டார் ‘என்கிற பெயரில் ஒரு படம். அதற்கான விளம்பர படத்தில் பவன் கல்யாண் சாயலில் சிவப்பு துண்டு போட்டபடி வாலிபர் ஒருவர்.பக்காவாக பவனை நினைவூட்டுகிற படம். ஆர்கேஜிக்கும் பவனுக்கும் ஆகவே ஆகாது என்பதால் இந்தப்படம் அவரையும் சிரஞ்சீவியையும் குறி வைத்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறார்கள்.
அருகில் அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்கள் மீது ஒரு கண்ணாடி தம்ளர். பொதுவாக சாராயம் ,டீ குடிப்பதற்கு பயன்படும். இப்படி ஒரு படத்தைப் போட்டால் பவர்ஸ்டாரின் ரசிகர்களுக்கு ஆத்திரம் வருமா வராதா?சிவப்பு துண்டு ,கலர் துண்டு போட்டு பவன் நடித்த படங்களை நினைவூட்டுகிற வகையில் இருந்தது.
நம்மூரில் சூப்பர்ஸ்டார் என்கிற பெயரில் படம் எடுக்க முடியுமா?
பவன் கல்யாணின் ரசிகர்கள் பொங்கிவிட்டார்கள். ராம்கோபால் வர்மாவின் பெயரில் ஒரு படம் எடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
“நான் யாரையும் களங்கப்படுத்தவில்லை .பாலாஜி மீது சத்யம் “என்று டிவீட் போட்டிருக்கிறார் ஆர்கேஜி .