மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லுவதற்கு இ பாஸ் வாங்க வேண்டும் என்று கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. கொடைக்கானலுக்கு செல்வதற்கு தடையும் விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வராததால் கொடைக்கானல் வெறிச்சோடிக்கிடக்கிறது .
ஆனால் நடிகர்கள் சூரி ,விமல் மற்றும் குழுவினர் தடைகளை மீறி கொடைக்கானலுக்கு சென்றிருக்கிறார்கள். வழியெல்லாம் எத்தனையோ சோதனைகள் இருந்தும் அவைகளை கடந்து தங்களின் செல்வாக்கினை பயன்படுத்தி கடந்திருக்கிறார்கள். கோடைக்கானலுக்குள்ளும் சென்று விட்டார்கள்.
சென்றவர்கள் அங்கு ஜாலியாக சுற்றி இருக்கிறார்கள். பேரிஜம் ஏரியில் மீன் பிடித்திருக்கிறார்கள். இவையெல்லாம் சமூக வலைத்தளங்களில் வெளியான பின்னர்தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். மீன் பிடித்ததாக வன இலாகாவினர் குற்றம் சாட்டி ரூ 2 ஆயிரம் அபராதம் விதித்திருக்கிறார்கள்.
நன்றாக இருக்கிறதே அதிகாரிகளின் அணுகுமுறை.!