தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா.
சைஸ் ஜீரோ என்கிற படத்துக்காக உடலை சற்று பெருக்க வைத்தார் .அதன் பிறகு எவ்வளவோ முயற்சிகள் .தற்போது ஓரளவு உடல் குறைந்திருக்கிறது.
பாகுபலி பட வெற்றிக்கு பின் தனக்கு பொருத்தமான, தேர்ந்தெடுத்த கதைகளிலேயே நடித்து வருகிறார்.அந்த வரிசையில் அனுஷ்கா தற்போது நடித்துள்ள படம், சைலன்ஸ் (நிசப்தம்).
லாக்டவுன் காரணமாக இதன் வெளியீடு தாமதமாகியுள்ள நிலையில், இப் படத்தை ஒடிடியில் ரிலீஸ் செய்வதா, அல்லது தியேட்டர் திறக்கும் வகையில் காத்திருப்பதா என இப்படக்குழு குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாம்
.இந்நிலையில், நடிகை அனுஷ்காவும், விஜய் சேதுபதியும் முதல் முறையாக இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கில் உருவாக இருக்கும் இந்தப் படத்தை ,தலைவி படத்துக்குப் பிறகு ஏ.ஏல் விஜய் இயக்குகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, அனுஷ்கா இருவருக்கும் முக்கியத்துவம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
விஜய் சேதுபதி, வில்லனாக நடித்துள்ள விஜய்யின் மாஸ்டர் படமும், நாயகனாக நடித்துள்ள க/பெ ரணசிங்கம் படமும் விரைவில் வெளியாக இருக்கின்றன. இதையடுத்து ஜனநாதன் இயக்கும் லாபம், வெங்கடகிருஷ்ணகாந்த் இயக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர், துக்ளக் தர்பார் உட்பட சில படங்களில் விஜய்சேதுபதி நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.