பாலிவுட்டில் இருந்து பளபளப்புக்காகவும் உடல் கவர்ச்சிக்காகவும் நடிகைகளை கோலிவுட் இறக்குமதி செய்கிறது .
நடிப்புத்திறமை இருக்கிறது என்று சொல்வதெல்லாம் மழுப்பல் தவிர வேறு எதுவும் இல்லை. இங்கே கதாநாயகர்களுக்குத்தான் முதலிடம் என்பது அந்த நாள் முதல் இந்த நாள் வரை யாவரும் அறிந்திருக்கிற உண்மை.
ஆனால் பாலிவுட்டில் தமிழர்கள் வளர்வதை விரும்ப,மாட்டார்கள். நடிகர்களும் தயாரிப்பாளர்களும் ஒன்றாக இணைந்து ஊறுகாயாக பயன்படுத்திக்கொள்வார்கள். சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பின்னர்தான் அங்கிருக்கிற ஆதிக்க வெறி வெளிவரத் தொடங்கி இருக்கிறது. சுஷாந்த் சிங் கடைசியாக நடித்திருக்கிற தில் பேச்சாரே படத்துக்கு ஏஆர் ரகுமானை இசை அமைப்பதற்கு அழைக்கக்கூடாது என்று நெபோட்டிசம் குரூப் சொல்லியிருக்கிறது. இதையும் தாண்டித்தான் ரகுமான் இசை அமைத்தார்.
ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் ரகுமானின் இசையில் மயங்கி அழைக்கிற நிலையில் வாய்ப்புக்கொடுக்காதே என்று ஒரு குரூப் பாலிவுட்டில் தடையாக நிற்கிறது.
இதை ரகுமானின் சகோதரி ஏஆர் ரெஹைனா சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார் .
ஏக இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கிற ரகுமானுக்கு தடை போடக்கூடிய சின்னபுத்திக்காரர்கள் பாலிவுட்டில் இருக்கிறார்கள் என்பது கேடுதான்.!