சல்பேட்டா என்கிற வார்த்தையை சில ஏரியா பேர்வழிகளிடம் சர்வ சாதாரணமாக கேட்கலாம். இந்த வார்த்தையை சினிமா டைட்டிலாக வைத்து படம் எடுப்பதற்கு சில இயக்குநர்கள் மட்டுமே ,முன்வருவார்கள்.
பா.ரஞ்சித் என்ன செய்யப்போகிறாரோ ? ஆர்யாதான் ஹீரோ.!
ஆர்யா ஜோடியாக துஷாரா நடிக்கிறார்.
வட சென்னை பின்னணியில் குத்துச் சண்டையை மையமாக வைத்து, த்ரில்லர் களத்தில் உருவாகவுள்ள இப் படத்திற்காக ஆர்யா தனது உடல் எடையை குறைத்து, முறுக்கேற்றி அசத்தலாக தயாராகி வருகிறார்.
இப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு, லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் மீண்டும் தொடங்க உள்ளது.
தற்போது ,நடிகர் ஆர்யா தனது நண்பர்களுடன் சைக்கிள் ஓட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சைக்கிள் ஓட்டுவதில் அதிக ஆர்வம் காட்டி வரும் ஆர்யா, சில லட்சம் செலவில் வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட சைக்கிளில் சென்னையிலிருந்து மகாபலிபுரம் வரை தன் நண்பர்களுடன் சென்றுள்ளார். (இவருக்கு இ-பாஸ் கிடையாதா சாமிகளே… ?) இவருடன் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் மற்றும் நடிகர் கலையரசன் ஆகியோரும் உள்ளனர்.