இது என்ன கொடுமை?
இன்றைய காலைப்பொழுது அவ்வளவு நல்லதாகத் தெரியவில்லையே!
நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்றதாக செய்தி. கடுமையான மன அழுத்தம். யாராலோ பாதிக்கப்பட்டு இருப்பதின் வலி ,பயம்,அச்சுறுத்தல் இப்படியெல்லாம் சொல்லுகிறார்கள். அவர் நாம்தமிழர் தலைவர் சீமான் ,மற்றும் ஹரி நாடார் என்பவர் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.அந்த வீடியோ தற்போது இணையங்களில் வைரலாகி இருக்கிறது
இந்த விஜயலட்சுமி பிரண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு இணையாக நடித்தவர் .பல படங்களில் நடித்திருக்கிறார். திடீரென ஒரு நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் உத வி செய்ய வேண்டும் என்பதாக செய்தி வந்தது. சூப்பர்ஸ்டார் ரஜினி ,தென்னிந்திய நடிகர் சங்கம் உதவிகள் செய்ததாக சொன்னார்கள்.
ஆனால் தற்போது கடுமையான மனா அழுத்தம் காரணமாக அதிக அளவு ரத்தக்கொதிப்பு மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக செய்தி.தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போதெல்லாம் திரைத்துறை சார்ந்த பெண்கள் மட்டுமில்லாமல் துணையில்லாமல் தவிக்கிற பெண்களுக்கு ஏதாவது இடர் என்றால் 108 எண் ஆம்புலன்ஸ் மாதிரி ஓடோடிச் செல்கிறார் கஸ்தூரி. இது அவசியம்தான்.வெறும் வாய்ச்சொல் இல்லாமல் செயலில் காட்டுகிற கஸ்தூரி மாதிரி நிறைய கஸ்தூரிகள் முன் வரவேண்டும்.
மருத்துவமனை சென்று விஜயலட்சுமியை சந்தித்து விட்டு திரும்பிய பின்னர் கஸ்தூரி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் செய்திருக்கிற பதிவு :
” மருத்துவமனையில் விஜயலட்சுமியின் குடும்பத்தினரை சந்தித்தேன், அவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்தேன். அவர்கள் மூவரும் தனிமையில் சிக்குண்ட சித்தப்பிரமை, சோகத்தில் நிலைகுலைந்து போன பெண்கள்.
நான் உஷாவுடன் பணிபுரிந்தேன், அவருடைய திருமணத்தில் கலந்து கொண்டேன், நேற்று அவரை கூட அடையாளம் காண முடியவில்லை” என்பதாக குறிப்பிட்டுள்ளார்.
நடிகை, நடன இயக்குநர் காயத்ரி ரகுராமின் பதிவில் ” விஜயலட்சுமியின் உடல்நிலை இப்போது பரவாயில்லை. சோஷியல் மீடியாவின் துஷ்பிரயோகம் , அச்சுறுத்தலால் அவர் பெரும் அதிர்ச்சியை சந்தித்துள்ளார். தனியொரு பெண்ணாக நின்று போராடி அவர் நிறைய எதிர்கொண்டார். சைபர் புல்லிங்கை நிறுத்துங்கள். அவரது தனிப்பட்ட வாழ்க்கை ஏமாற்றப்பட்டது ஒரு பெரிய காரணம். உலகம் அவரை சரியாக ட்ரீட் செய்யவில்லை, அதுதான் அவரை இதை செய்ய வைத்துள்ளது.”என்று வருத்தப்பட்டிருக்கிறார் .