நீண்ட தாடி ,நெடிய தலைமுடி. சாதுக்களைப்போல பெரிய துண்டினால் உடலை மறைத்துக் கொள்ளும் பவ்யம்.
பார்க்கிறவர்கள் எல்லோரும் இவரா பவர் ஸ்டார் ,ஜனசேனாவின் தலைவர் என்று வியந்து போகிறார்கள்.அந்த அளவுக்கு மெலிந்து போயிருக்கிறார் ,பவன் கல்யாண்.
ஏனிந்த மாற்றம்? சாமியாராகி விட்டாரா?
சதுர்மாச தீக் ஷா விரதம் ஒரு வேளை மட்டுமே உணவு!
“என்ன பாபாவாகி விட்டாரா ?”என்று எல்லோருமே கேட்கிறார்கள்.
இவர் நடித்து வருகிற ‘வக்கீல் சாப் ‘ படம் இன்னும் முடிவடையாத நிலையில் திடீரென உடல் மாற்றம். தில் ராஜுவுக்கு எப்படியும் இந்த படத்தை பொங்கலுக்கு கொண்டுவந்துவிட வேண்டும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.