தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா மந்தனா நடித்த திரைப்படம் ’டியர் காம்ரேட்’.
இந்த படத்தில் கிரிக்கெட் வீராங்கனை கேரக்டரில் நடித்திருப்பார். இந்த கேரக்டரில் இயல்பாக நடிக்க வேண்டும் என்பதற்காக அவர் சில நாட்கள் கிரிக்கெட் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் .
. இந்நிலையில்,இப்படம் வெளியாகி ஒரு வருடம் முடிவடைந்ததை அடுத்து ராஷ்மிகா மந்தனா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கிரிக்கெட் பயிற்சி எடுத்த வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்
ராஷ்மிகா மந்தனாவின் 5 நிமிட கிரிக்கெட் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இது குறித்து ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளதாவது,,
’எந்த ஒரு செயலையும் நாம் விருப்பப்பட்டு கடின முயற்சியுடன் செய்தால் பழகிக் கொள்ளலாம் என்றும் கிரிக்கெட் விளையாட்டை எப்படி விளையாட வேண்டும் என்று கூட தனக்கு தெரியாது என்றும் பேட்டை எப்படி பிடிக்கவேண்டும் என்பது கூட தெரியாத நான் பயிற்சியின் மூலம் ஓரளவுக்கு இந்த விளையாட்டில் தேறினேன் .எனவே கண்டிப்பாக நம்புங்கள், உங்களால் முடியாதது எதுவுமே இல்லை! கடின முயற்சி மற்றும் நம்பிக்கை ஆகியவை இருந்தால் கண்டிப்பாக நாம் எந்த துறையிலும் முன்னேறலாம்’ என்று ராஷ்மிகா மந்தனா குறிப்பிட்டுள்ளார்.