உலகநாயகனின் மூத்த வாரிசு ஸ்ருதி ஹாசன் தமிழ்,தெலுங்கு கன்னடம்,மலையாளம் இந்தி மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறவர்.
தற்போது ஜனநாதன் இயக்கும் லாபம் படத்தில்விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.அந்தப்படம் இன்னும் முடிவடையவில்லை.
கொரோனா லாக்டவுன் காரணமாக, மும்பையில் உள்ள தனது வீட்டில் வசித்துவந்த நடிகை ஸ்ருதிஹாசன், சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆர்வம் காட்டுகிறவர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதையும், அதைச் சொல்வதில் தனக்கு வெட்கம் இல்லை என்றும் கூறியிருந்தார்.அப்பாவிடம் அனுமதி வாங்கினாரா? அவர் என்ன சொன்னார்?
பின்னர் லாக்டவுன் காரணமாக, மன ஆரோக்கியம் கடுமையாகப் பாதிக்கப் பட்டதாகவும், மூன்று வருடங்களாக இதற்கானச் சிகிச்சையில் இருக்கிறேன் என்றும் மிக தைரியமாக கூறியிருந்தார்.
இந்நிலையில், அவர் ஓடிடி டிஜிட்டல் தளத்துக்காக உருவாகும் யாத்ரா என்று பெயரிடப்பட்டுள்ள படம் ஒன்றில் நடித்துவருகிறார்.
இவருடன், வித்யூத் ஜாம்வால், அமித் சாத், விஜய் வர்மா, சஞ்சய் மிஸ்ரா உட்பட பலர் நடிக்கின்றனர். திக்மன்ஷு துலியா இயக்குகிறார். இது கேங் ஸ்டோரி என்ற பிரெஞ்ச் படத்தின் ரீமேக். இந்தப் படத்துக்காக நடிகை ஸ்ருதிஹாசன் டூப் எதுவும் போடாமல் தானே லாரி ஓட்டி நடித்துள்ளார்.
லாரி ஒட்டிய ‘மேஜிக்’ அனுபவம் குறித்து ஸ்ருதிஹாசன் கூறுகையில்,” நான் சிறப்பான டிரைவர் இல்லை. இருந்தாலும் எனக்கு ஸ்டன்ட் யூனிட்டைச் சேர்ந்த ஒருவர் உதவி செய்தார். அவர் மறைந்திருந்து கிளட்ச் மற்றும் கியரை மாற்ற உதவினார். அவரை நான் வாழ்த்துகிறேன். அது எளிதான விஷயம் அல்ல என்பது எனக்குப் புரிந்தது. உத்தராகண்ட் மலைப் பகுதியில் லாரி ஓட்டுவது என்பது கடினமான ஒன்று’ என்று ஒளிவு மறைவு இல்லாமல் கூறியுள்ளார்.