மதுரைக்காரத் தம்பிகளா ,உங்க அண்ணன் தனுஷ் ஷூட்டிங் நடத்த உங்க ஊருக்கு வர்றாங்களாம் .கூடவே பாலிவுட் நடிகர்களும் ! லட்டு மாதிரி சாரா அலிகான் .செம ஜாலிதான்.அதகளப்படுத்துங்க,!
இந்தியில்ஆனந்த்.எல்.ராய். இயக்கத்தில்,நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ராஞ்ஜனா திரைப்படம் அங்கு நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தை தொடர்ந்து மீண்டும் தனுஷ்,அக்ஷய் குமார்,சாரா அலிகான் ஆகியோரது நடிப்பில் உருவாகும் அட்ரங்கி ரே என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார்.
ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து வரும் இப்படத்தை பூஷன்குமார் தயாரிக்கிறார்.
இப்படத்தில் நடிக்க, நடிகர் அக்ஷய் குமாருக்கு ரூ.120 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். வடக்கே இம்புட்டு சம்பளம் கொடுக்கிறாய்ங்களா?
இப்படத்தின் நாயகி சாரா அலிகான் இதில், 2 வேடங்களில் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் வாரணாசியில் தொடங்கியது.அங்கு தனுஷ், சாரா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.ஆனால், கொரோனா காரணமாக லாக்டவுன் வந்து விட்டதால் இதன் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
2021-ம் ஆண்டு காதலர் தினத்தன்று இப் படத்தைத் திரையிட படக்குழு முதலில் திட்டமிட்டிருந்த நிலையில் லாக்டவுன் காரணமாக மொத்த திட்டமும் மாறி இருக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு, வரும் அ க்டோபரில் மீண்டும் தொடங்க இருப்பதாக அட்ரங்கி ரே பட இயக்குனர் ஆனந்த்.எல்.ராய் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘அடுத்த ஷெட்யூல் தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளுடன் மதுரையில். அக்டோபர் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளோம். பிறகு அக்ஷய்குமாருடன் மும்பை, டெல்லியில் ஒரு மாதத்துக்கு படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.