வாணியர் செட்டியார் சமுதாயத்துக்கு எதிராக பேசியுள்ள வேலுபிரபாகரனைக் குண்டர் சட்டத்தில் கைது செய்யா வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளரும் ,தமிழ்நாடு வாணியர் சங்கம் சங்கத்தின் நிறுவனத் தலைவருமான ரோகினி பன்னீர்செல்வம் புகார் தெரிவித்துள்ளார்.இது குறித்து ரோகிணி பன்னீர் செலவும் கூறியதாவது,
“திரைப்பட இயக்குநர் வேலுபிரபாகரன் வாணியர் செட்டியார் சமுதாயத்துக்கு எதிராக சேனல் விஷன் என்கிற யூடியூப் சேனலில் மிகவும் இழிவாக அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளார் .அதனால் அந்தச் சமுதாய மக்கள் பெரும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். பகுத்தறிவு என்பது மக்களை நேர்வழியில் எடுத்துச் செல்வது என்று தான் இருக்க வேண்டும். இது போல் அருவருக்கத்தக்க வகையில் பேசுவதில் அல்ல.எங்களுக்கும் பெரியார் கொள்கைகள் உடன்பாடில்லை என்றாலும் நாங்கள் அது பற்றிப் பேசுவதில்லை .விமர்சிப்பதில்லை. உங்களுக்குக் கொள்கை எதுவாகவும் இருக்கலாம். ஆனால் அடுத்தவர் மனதைப் புண்படுத்தும்படி பேச யாருக்கும் உரிமை கிடையாது. சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுவதற்கும் விமர்சிப்பதற்கும் யாருக்கும் உரிமை கிடையாது.அப்படிச் செய்தால் அது அயோக்கியத்தனம். வேலு பிரபாகரனுக்கு எதிராக நாங்கள் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறோம். இதுபோன்று சுமார் 200 இடங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இப்படிச் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய வேலுபிரபாகரனைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து அவருக்குத் தக்க தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.” என்றார்.