இந்தியாவின் உச்ச நடிகர் என்கிற பெருமை அந்த ஒற்றை மனிதர் அமிதாப் பச்சனுக்கு மட்டுமே சேரும்.
அவர் அண்மையில் கொரானா கொள்ளை நோய்த் தொற்றால் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இவருடன் மகன் அபிஷேக் ,மருமகள் ஐஸ்வர்யாராய் .பேத்தி ஆராதியா ஆகியோரும் நோய்த்தொற்று காரணமாக அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் மருமகளும் பேத்தியும் குணம் பெற்று திரும்பிவிட்டார்கள் .
அமிதாப் ,அபிஷேக் இருவர் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பொதுவாக பிரபலங்களின் ஆதரவாளர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்வார்கள். குணம் பெற்று திரும்புக என்று பிரார்த்திப்பார்கள். ஆனால் சில விஷமிகள் நச்சுக்கருத்துக்களை வெளியிட்டு தனது அரிப்பினை தீர்த்துக்கொள்வார்கள்.
அப்படி ஒருவன் “அப்படியே மரணித்துப்போ “என்பதாக அமிதாப்புக்கு சாபம் விட்டிருக்கிறான் .அவனுக்கும் பதில் சொல்லியிருக்கிறார் அமிதாப் கடுமையாகவே!
“திருவாளர் அடையாளம் தெரியாதவரே, உன் அப்பா பெயரை உன்னால் எழுத முடியாது. ஏனென்றால், உனக்கு உன் அவர் யாரென்றே தெரியாது.” என காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.
” சீக்கிரமா வீடு திரும்பிடுவீங்க தாத்தா” என ஆராத்யா கூறியது தனக்கு கண்ணீரை வரவழைத்து விட்டது , ரசிகர்களின் பிரார்த்தனையால் குணமாகி திரும்புவேன்” என்பதாகவும் கூறியுள்ளார்.