“நாசமா போக”என்று வாய் நிறைய சாபம் கொடுத்தார்கள் நம்பியார் சாமிக்கு.!
படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு வில்லனாக நடித்த காலத்தில்.!
அந்த அளவுக்கு கண்களை உருட்டியும் கைகளை பிசைந்தும் கொடூரமாக நடித்திருப்பார்.
ஆனால் நிஜத்தில் அவர் நல்லவர். அய்யப்ப பக்தர். குருசாமி. பிற்காலத்தில் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக மாறி மக்கள் மனதில் தனி இடம் பிடித்து இருந்தார்.
அவரைப்போலவே—–
தற்போது பாலிவுட் நடிகர் சோனு சூட். பக்கா வில்லன் நடிகர். தமிழ்ப்படங்களிலும் வில்லனாக நடித்து பலத்த காயங்களுடன் தோற்றுப்போவார்.
ஆனால் குணத்தில் தங்கமானவர்.
கொரானா தொற்றுக்குப் பயந்து வேலைகளை இழந்து சொந்த ஊருக்குப்போவதற்கு கையில் காசு இல்லாமல் சொந்த ஊருக்கு நடந்து போனார்களே அப்பாவித் தொழிலாளர்கள்.
அவர்களுக்கு தன்னுடைய சொந்த செலவில் வாகனங்களை அமைத்து ஊர் திரும்ப வழி வகுத்து கொடுத்தார்.
இது மட்டுமல்ல இன்னும் எத்தனையோ நல்ல காரியங்கள் அப்பாவி ஏழை மக்களுக்காக.!
அண்மையில் மகள்களை மாடாக பாவித்து ஏர் ஓட்டிய ஏழை விவசாயி பற்றிய செய்தி வெளியான சில நாளில் டிராக்டர் வாங்கிக் கொடுத்தார்.
மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது.
பாலிவுட்டில் பெரிய பெரிய ஹீரோக்களான சல்மான் கான் ,ஆமீர்கான் இன்னும் பலர் செய்யாத உதவிகளை சோனு சூட் செய்தார்.
இதுவே அவரது சினிமாத் தொழிலுக்கு குழி வெட்டுகிறது.
“மக்களிடம் நல்ல பெயர் வாங்கியவரை நாங்கள் எப்படி வில்லனாக காட்டுவது? எங்களிடம் உதை வாங்கினால் மக்கள் ஏற்பார்களா?கொடூர வில்லனாக காட்ட முடியுமா? ஆகவே வேற வில்லனைப் பாருங்கள்” என்று பாலிவுட் கேங் திட்டம் வகுத்திருக்கிறது என்கிறார்கள்.
அடப்பாவிகளா !
பாலிவுட்காரர்களால் ஆஸ்கர் வாங்க முடியவில்லை ,ஒரு தமிழன் வாங்கிவிட்டானே என்கிற பொறாமையினால் ஏஆர் ரகுமானை ஓரம் கட்டிய உத்தமர்கள் தற்போது ஏழைகளுக்கு உதவினார் என்பதற்காக ஒரு வில்லன் நடிகரை ஒதுக்கித் தள்ளுகிறீர்கள் !
உருப்படமாட்டீர்கள்.!வெற்றி பெறவும் மாட்டீர்கள் .
1