அகில இந்திய அளவில் நடிகர் யாஷ் பிரபலம் ஆனது பிரஷாந்த் நீலின் ‘கேஜிஎப் ‘படத்தின் வழியாகத்தான்.!
தற்போது அதன் இரண்டாம் பாகம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக வர இருக்கிறது. அதிக பொருட்செலவில் தயாரித்து வருகிறார்கள்,
நினைத்துப்பார்க்காத வகையில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை ஆதிரா கேரக்டரில் வடிவமைத்திருக்கிறார்கள். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது தோற்றம் இன்று வெளியிடப்பட்டது.