உழவன் பவுண்டேஷன் என்ற அமைப்பின் சார்பில், நடிகர் கார்த்தி, இயற்கை வளங்களை வளர்ச்சி திட்டங்களுக்காக அழிக்க நேரிட்டால், மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டிய அவசியமில்லை
என்பது மாதிரியான உருவாக்கப்பட்டுள்ள EIA 2020 திட்டத்துக்கு எதிராக நேற்று ஒரு அதிரடி அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.அதில்,”பல முக்கிய திட்டங்களை மக்கள் கருத்துக் கேட்பு மற்றும் பொது ஆலோசனைகள் இல்லாமலேயே நிறைவேற்றலாம்” என்கிற ஒரு சரத்தே, நம் உள்ளத்தில் மிகப் பெரிய அவநம்பிக்கையையும் அச்சத்தையும் உருவாக்குகிறது. நம்முடைய சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களையும், அதனால் நமக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் மக்களாகிய நாம் பேசவே முடியாது என்பது எந்த வகையில் நியாயமான ஒரு சட்டமாக இருக்கும்?
மேலும் தொழிற்சாலைகள் வகைப்பாடு மாற்றம், பழைய விதி மீறல்களுக்கு பிந்தைய உண்மை (Post Facts) மக்கள் கருத்து பதிவுக்கான நாட்களைக் குறைப்பது போன்ற சரத்துகளும் நம்மை அச்சுறுத்துகின்றன. குமரி முதல் காஷ்மீர் வரையிலுமான சட்டம் என்ற போதும், இந்த வரைவறிக்கை வெறும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே வெளியிடப்பட்டு இருக்கிறது. தமது தாய்மொழி மட்டுமே அறிந்த கோடிக்கணக்கான மக்கள் இந்த கொள்கைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டாமா?என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். கார்த்தியின் அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், கார்த்தியின் அறிக்கைகள ஆதரவாகநடிகர் சூர்யா தனது டுவிட்டரில்,”பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்..” என EIAவிற்கு எதிரான தனது கருத்தை கார்த்தியின் அறிக்கையுடன் பகிர்ந்து ள்ளார்.