நடிப்பதற்கு வாய்ப்புகள் வராவிட்டாலும் தயாரிப்பில் கவனம் செலுத்தியவர் நித்தின் சத்யா.
நண்பர் ஜெய் நடிப்பில் வெளியான ஜருகண்டி படத்தைத் தொடர்ந்து, இரண்டாவது
திரைப்படமாக ‘லாக்கப்.’ என்கிற முழுக்க, முழுக்க இன்வெஸ்டிகேடிவ் கிரைம் திரில்லரை தயாரித்திருக்கிறார் . வைபவ் கதாநாயகனாகவும் சின்னத்திரை வாணி போஜன் கதாநாயகியாகவும் நடிக்க, பிரபல இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரபு போலீஸ் அதிகாரியாக முற்றிலும் மாறுபட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர்களுடன் ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குநர் மோகன்ராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் ஒளிப்பதிவை ஆரோல் கரோலி கவனிக்க,சாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் குறித்து இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ் கூறியதாவது,
‘சமீபத்தில் வெளியான ‘லாக்கப்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.இதில் வெங்கட்பிரபு போலீஸ் சப் இன்ஸ்பெக்டராகவும், வைபவ் இன்ஸ்பெக்டராகவும் நடித்துள்ளனர்..
இருவரும் பணியாற்றும் போலீஸ் நிலையத்தில் உள்ள லாக்அப்பில் நடக்கும் ஒரு சம்பவம் இருவரையும் பெரிய சிக்கலில் மாட்டிவிடுகிறது.
எதிரெதிர் துருவங்களாக உள்ள இருவரும் அந்த பிரச்சினையை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் இப் படத்தின் கதை. ஜாலியான கதாபாத்திரங்களில் இதுவரை நடித்து வந்த வைபவ், இதில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படம் அவருக்கு பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தும் படமாக அமையும் கடந்த 4 மாதங்களாக கொரோனா லாக்டவுன் அமலில் உள்ளதால் வேறு வழியின்றி இப்படத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் நோக்கில் வரும் ஆகஸ்ட் 14 அன்று ஜி/5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.‘லாக்கப்’ திரைப்படம் மிகச் சிறந்த, சிலிர்க்க வைக்கும் திரில்லருடன் சீட்டின் நுனிக்கு பார்வையாளர்களை கொண்டுவரும். அனுபவங்களை உள்ளடக்கியதாக இருக்கும்”.என்கிறார்.
இந்த படத்துக்கு முன்னதாகவே மக்கள் செல்வி வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கிற டானி என்கிற படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.