நடிகர் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் ஓடிடி தளத்தில் பென்குயின் திரைப்படம் வெளியானது.தொடர்ந்து பல பிரபலங்களின் படங்கள் அதே தளத்தில் வெளியாகிவருகின்றன .பிரபல ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையாவின் ‘டேனி ‘படமும் வெளியாகவிருக்கிறது. தமிழகத்தில் மட்டுமில்லாமல் பாலிவுட் டோலிவுட் என பிற மாநிலங்களிலும் ஓடிடி தளத்தில் படங்கள் ரிலீஸ் ஆகின்றன.தயாரிப்பாளர்களும் லாபம் பெறுகிறார்கள்.
முன்னதாக பெண் குயின் திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெவித்திருந்தார் .
” இனிமேல் சிவகுமாரின் குடும்பத்தினர் நடிக்கும் திரைப்படங்களை இனிமேல் ஓடிடி தளங்களிலேயே வெளியிட்டு கொள்ளட்டும்” எனக் கூறியிருந்தார்.
நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரான கார்த்தி, ஜோதிகா உள்ளிட்டோரின் திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாகுமா என்கிற கேள்விக்கு பதிலளித்த பன்னீர்செல்வம், ”ஓடிடியில் அவர்கள் படம் வெளியிட முடிவு எடுத்தபோது,எங்கள் வாழ்வாதாரத்தைப் பற்றி கவலைப்படாமல் இப்படிச் செய்யும்போது நாங்கள் அதிலேயே வெளியிட்டுக் கொள்ளட்டும் என்று தான் சொன்னனோம்.
அப்போது அவர்களுக்கு நாங்கள் திரையரங்குகள் கொடுக்க மாட்டோம் என்று சொல்லவில்லை.
சிவகுமார் குடும்பத்துப் படங்களை அந்த பிளாட்பாரத்திலேயே வெளியிட்டுக் கொள்ளட்டும். இதுதான் எங்கள் நிலை” என்று கூறினார்.