இந்தியாவின் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் குடும்பத்தில் அவரது மனைவி ஜெயா பச்சன் தவிர மகன் அபிஷேக் ,மருமகள் ஐஸ்வர்யா பச்சன் .பேத்தி ஆராதியா ,அமிதாப் ஆகிய நாலாவரும் கொரானா தொற்றுக்கு ஆளாகினார்கள் .இவர்களில் பேத்தியும் மருமகளும் குணம் அடைந்து வீடு திரும்பிவிட்டனர்
கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்த நடிகை ஐஸ்வர்யாராய் தனது சமூகவலைதள பக்கத்தில் ரசிகர்களுக்கு ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
”எனது தேவதையான ஆராதியா, அமிதாப் ,, எனது கணவர் அபிஷேக் மற்றும் எனக்கும் நீங்கள் செய்த பிரார்த்தனைகளுக்கும் அன்புக்கும் நன்றி. உங்களுக்கு மிகவும் நன்றி கடன் பட்டுள்ளோம். உங்களின் இந்த அன்பை கண்டு எனது இதயம் கரைந்துவிட்டது. மிக்க நன்றி” என அவர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அவரும் மகள் ஆராதியாவும் அன்புடன் கையெடுத்து வணங்குவது போன்ற புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.