இசை அமைப்பாளர் சாம்.சி.எஸ். ‘விக்ரம் வேதா ‘படத்தின் வழியாக அழுத்தமான முத்திரையைப் பதித்திருக்கிறார்.கைவசம் டஜன் படங்கள் .
இது தொடர்பாக அவர் என்ன சொல்லுகிறார் ?
“திரைத் துறையைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கை காரணமாகத்தான் இந்த வெற்றி சாத்தியமானது. ரசிகர்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவனாகவே என்னை பார்க்கிறார்கள் .
என் பலமே ரசிகர்கள் தான். சமூக வலைதளங்களில் அவர்கள் போடும் பதிவுகள், ட்வீட்கள் மற்றும் தனிப்பட்ட தகவல் செய்திகளை எல்லாம் பார்க்கும்போது, சந்தோஷமாக இருக்கிறது என்று சொல்லி ஒரு புன்னகையுடன் சாதாரணமாக அதைக் கடந்து போய்விட முடியாதபடி என் கண்களை அவை ஈரமாக்குகின்றன.
ரசிகர்களின் இந்த அன்பு மழை என்னை தெய்வீகத் தன்மையாக உணர வைக்கிறது. இந்த அதிர்வலைகள் மேலும் எனக்கு சக்தியையும் நம்பிக்கையையும் தருவதுடன், இன்னும் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்ற பொறுப்பையும் அதிகப்படுத்துவதாக அமைந்திருக்கிறது ” என்கிறார்.
மாதவனின் ‘ராக்கெட்ரி’, அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படம், ரெஜினா கேஸண்ட்ராவின் ‘சூர்ப்பனகை’, விஜய் சேதுபதியின் ‘800’, சசி குமாரின் ‘ராஜவம்சம்’, ஜெய் நடிக்கும் ‘எண்ணித் துணிக’, உதயநிதி ஸ்டாலினின் ‘கண்ணை நம்பாதே’, ‘மோச கல்லு’ தெலுங்குப் படம், ரவி தேஜாவின் பெயரிடப்படாத படம், ஹரீஷ் கல்யாண் நடிக்கும் நேரடித் தெலுங்குப் படம், புஷ்கர் காயத்ரியின் வெப் சீரிஸ் என சுமார் ஒரு டஜன் படங்கள் சாம் சி.எஸ்.கைவசம் இருக்கின்றன.