சிம்பு நடிப்பில்,வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் மாநாடு .
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி,தைரியமானவர். கருத்துகளை அழுத்தமுடன் பதிவு செய்கிறவர்.
இவர் நெபோட்டிசம் பற்றி என்ன சொல்கிறார்?
“தமிழ்த் திரையுலகிலும் நெபோடிசம் கொடி கட்டி பறக்கிறது.இது எத்தனை பேருக்கு தெரியும்? என்கிறார்.
இது குறித்து அவரது விரிவுரை:,
” பாலிவுட்டில் மட்டுமல்ல ! குரூப்பிசம் இங்கும் உள்ளது. நடிகர்களிடம் உள்ளதோ இல்லையோ ஒருசில தயாரிப்பாளர்களிடம் உள்ளது. அவர்களால்தான் மிகப்பெரிய பழம்பெரும் தயாரிப்பாளர்களும் ஒதுங்கியிருக்கின்றனர்.
தான் மட்டுமே வாழவேண்டும் என நினைக்கும் அந்த பிரபல தயாரிப்பாளர் ( யார் சார் அவர்? இவ்வளவு சொல்கிற நீங்கள் அவரது பெயரையும் சொல்லிவிடலாம்? எதற்காக அச்சம்.) தன் பலத்தால் சில பல படத் தயாரிப்பாளர்களை உடன் சேர்ந்துகொண்டு பலரை வாழவிடாமல் கெடுத்துக்கொண்டிருக்கிறார்.
ஹீரோக்களுக்கு போன் பண்ணி கெடுத்துவிடுவதும், ஃபைனான்சியர்களை கலைத்துவிடுவதும், படத்தைப் பற்றி கேவலமாக கிளப்பிவிட்டு விநியோகஸ்தர்களிடம் பீதியை உருவாக்குவதுமாக முன்னால் விட்டு பின்னால் செய்யும் வேலையை வெற்றிகரமாக செய்துவருகிறார்.
அதற்கு சில தயாரிப்பாளர்கள் உடன் பட்டு நிற்பதுதான் வேதனை. வெகுவிரைவில் முகத்திரைகள் கிழியும். அதற்கு நடுவில் பாலிவுட் போல யாரும் தற்கொலை, அது, இதுன்னு இறங்கிவிடக்கூடாது. குரூப்பிசம் விரைவில் ஒழிக்கப்பட வேண்டும்” என்கிறார்..