கொரானா காலத்திலும் நடிக ,நடிகைகள் அவசரம் அவசரமாக கல்யாணம் செய்து கொள்கிற இந்த காலத்தில் வில்லன் நடிகர் மட்டும் தள்ளிப்போட்டு இருக்கிறார்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. கொரோனா ஊரடங்கும் சில தளர்வுகளுடன் மீண்டும் நீட்டிக்கப் பட்டு உள்ளது.
லாக்டவுனை பொருட்படுத்தாமல் தெலுங்கு நடிகர்கள், நிகில் சித்தார்த்தா, நிதின் மற்றும் சில மலையாள நடிகர்கள் தங்கள் திருமணத்தை நடத்தினர்.
தெலுங்கு நடிகர் ராணா டகுபதி அடுத்த மாதம் 8 ஆம் தேதி தனது திருமணத்தை நடத்த இருக்கிறார். நடிகை நிஹரிகா திருமணம் வரும் டிசம்பரில் நடக்கிறது.இந்நிலையில் தமிழில் அஜீத்தின் வேதாளம், விஜய் சேதுபதியின் றெக்க, மெஹந்தி சர்க்கஸ், காஞ்சனா 3, சித்தார்த் நடிக்கும் அருவம் படங்களில் வில்லனாக நடித்த நடிகர் கபீர் சிங் என்கிற கபீர் துஹான் சிங், தனது திருமணத்தை டிசம்பர் மாதத்துக்குத் தள்ளி வைத்துள்ளார்.
ஹரியானாவைச் சேர்ந்த இவர் தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்து வருகிறார்.தெலுங்கில் முன்னணி வில்லன் நடிகராக இருக்கும் இவரும் இந்திப் பட பின்னணி பாடகி டோலி சிதுவும் காதலித்து வந்தனர். பின்னர் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் கடந்த வருடம் ஜூன் மாதம் நடந்தது. இதை, கபீர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்.
ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர்.தற்போது நீட்டிக்கப்பட்ட லாக்டவுனால் தனது திருமணத்தை டிசம்பர் மாதத்துக்குத் தள்ளி வைத்துள்ளார் .