புறம்போக்கு என்கிற பொதுவுடமை படத்தை தொடர்ந்து, இயக்குனர் எஸ் பி ஜனநாதன், 5 வருட இடைவெளிக்கு பின்,தற்பொழுது மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘லாபம்’என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இதன் படப்பிடிப்புகள் ஏற்கனவே முற்றிலும் எடுக்கப்பட்டுவிட்ட நிலையில்,கொரானா லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் டப்பிங் வேலைகள் உள்ளிட்ட ஒரு சில வேலைகள் முடிக்க முடியாமல் தடைபட்டு வந்த நிலையில், இப்பொழுது டப்பிங் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன், கலையரசன், உள்ளிட்ட பலர் நடித்துவரும் இந்த படத்தின் வித்தியாசமான போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பை பெற்ற நிலையில்,நடிகர் விஜய் சேதுபதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் நடித்த காட்சிகளுக்கு டப்பிங் பேசிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு, லாபம் படத்தின் டப்பிங் வேலைகள் முடிந்துவிட்டது என கூறியுள்ளார்.