பாலும் தேனும் தனியாக இருந்தால் அதனதன் சுவைதான் இருக்கும்.
இரண்டும் கலந்தால் அதன் சுவையே தனி.பலனும் அதிகம்.
அதைப்போலத்தான் ஆணும் பெண்ணும் இணைந்தால்தான் வாழ்க்கையில் முழுமையான அங்கீகாரம் கிடைக்கும்.
இயக்குநர் விக்னேஷ்சிவன் -நயன்தாரா இருவரும் லீவ்-இன் -ரிலேஷன்ஷிப்பில் இருந்தாலும் கணவன் மனைவி என்கிற உயர்நிலை கிட்டவில்லையே.!
நமது கலாசாரப்பெருமைகளில் கணவன் மனைவி உறவும் ஒன்று.
அந்த உறவுக்காகத்தான் இருவரும் கோவில் கோவிலாக சென்று வந்தார்கள்.
நயன்தாராவுக்கு தோஷம் இருப்பதாக அவரது ஆஸ்தான ஜோதிடர் சொன்னதின் விளைவு ஆலய தரிசனம்.
திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலம் மட்டும் செல்லவேண்டியதிருக்கிறது.
இங்கும் சென்று வந்து விட்டால் திருமணம் செய்து கொள்ள வேண்டியதுதான் என்கிறார்கள் .
ஆனால் கோவிலுக்கு செல்லவிடாமல் குறுக்கே வந்து கிடக்கிறது கொரானா என்கிற கொள்ளை நோய்.ஆலயங்களையே மூட வைத்து விட்ட அசுர சக்தி கொண்ட அந்த கொரானாவை அழித்தொழிக்கும் ஆற்றல் உள்ள ஆயுதம் எப்போது கிடைக்குமோ,ஆலயங்கள் எப்போது திறக்குமோ?
ராகுவின் தரிசனம் கிட்டிய பின்னர்தான் திருமணம் என்கிறார்கள். பார்க்கலாம் !