என்னை அறிந்தால் படம் முதற்கொண்டு பல படங்களில் தனது நடிப்பால் ஒவ்வொருவரையும் கவர்ந்தவர் அருண் விஜய்,
அவர் துவங்கி இருக்கும் ஐஸ் இன் என்டர்டெய்ன்மென்ட் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் மூலம், தயாரித்து நடிக்கும் படத்துக்கு, ஈரம் அறிவழகனை இயக்குனராகப் போட்டுள்ளார் அருண் விஜய். கதைப்போக்கிலும் தொழில் நுட்பத்திலும் தனித் தன்மையோடும் ஒப்புமை இல்லாத வகையிலும் உருவாக இருக்கிறது இந்தப் படம்.
இதுகுறித்து அருண் விஜய் கூறியதாவது,”திரைத் துறையையே முழு வாழ்க்கையாகக் கொண்ட ஒரு பெரிய குடும்பத்தில் இருந்து வந்த நான் , அதே துறையில் எனது சிறப்பான பங்களிப்பை தர விரும்புகிறேன்.நான் எனது Ice-In Cinemas Entertainment,தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியதும் முழு ஆர்வத்துடன் கதைகள் கேட்டேன் . அவற்றில் அறிவழகன் சொன்ன கதை மிக வித்தியாசமாகவும் தவிர்க்க முடியாத அளவுக்கும் இருந்தது . படத்தை ஆரம்பித்து விட்டோம் ” என்கிறார் .