பொங்கிவிட்டார் கவிப்பேரரசு. இதுநாள் வரை அமைதி காத்து வந்த வைரமுத்து பொறுமை இழந்து விட்டார் போலும். சமூகவலைதளங்களில் இவரைப்பற்றி என்னவெல்லாமோ சொல்லி வந்த சிலர் தாக்குவதை ஒரு நாகரீகம் எனக் கருதி விட்டதைப்போல கருத்துகளை பகிர்ந்து வந்தனர் என்கிற வருத்தம் வைரமுத்துவின் ஆதரவாளர்களுக்கு இருந்து வந்தது.
அவர்களுக்கு ஆறுதல் கூறுவதைப்போல வைரமுத்து அவரது கவிதை நடையிலேயே தனது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் .அப்படியே கோவிட் 19 கொள்ளை நோய்க்கு ஆளாகி இருக்கிற தமிழக ஆளுநர் ,மற்றும் இந்திய உள்துறை மந்திரி ,கர்நாடக முதல்மந்திரி ஆகியோர் நலம் பெற வாழ்த்தும் தெரிவித்து இருக்கிறார் .
பொதுவாழ்வுப் போராளிகளே!
பொய்ப்பழிகள் புன்னகைக்குரியன.
சலசலப்பு இல்லாவிடில் பனங்காட்டுக்கேது பாட்டு?
அவதூறுகள் இல்லாவிடில் உயிர்வாழ்வுக்கேது ஊட்டம்?
பழிக்கப்படும்வரை நீங்கள் உயிர்ப்போடும்… உயர்வோடும்…
கொரோனா ஒவ்வொரு குடிமகனையும்
ஒருமுறை தொட்டுப் போகலாம்;
மீளும் வாய்ப்பே அதிகம்.
போரை எதிர்பார்க்கும் எல்லை வீரனைப் போல்
நம் மனம், உடல், மருத்துவம் மூன்றையும்
ஆயத்தப்படுத்திக் கொள்வது அவசியம்.
இந்திய உள்துறை அமைச்சர்,
தமிழ்நாட்டு ஆளுநர், கர்நாடக முதல்வர் நலமுற வாழ்த்துவோம்.