வெயில், அங்காடித் தெரு, அரவாண், காவியத்தலைவன் படங்களின் இயக்குநர் வசந்த பாலன், ஜிவி பிரகாஷ் நடிப்பில், ஜெயில் படத்தை இயக்கியுள்ளார்.
இதில், ஜி.வி பிரகாஷுக்கு ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார்.
ராதிகா, ரோபோ ஷங்கர், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது
இப்படத்திற்காக தனுஷ் மற்றும் அதிதி ராவ் பாடிய, காத்தோடு காத்தானேன் பாடல் வைரல் ஆகியது.
படத்தின் இரண்டாம் பாடல் விரைவில் வெளியாகும் என்று கூறியுள்ள ஜிவி. பிரகாஷ், தனது டுவிட்டர் பக்கத்தில்,”பத்து காசு இல்லன்னாலும் பணக்காரண்டா…என் சொத்து சுகம் எல்லாமே என் நண்பன் தானடா… “என்ற பாடல் வரிகளை பதிவு செய்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் தற்போது,வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் வாடிவாசல் படத்திற்கும், கார்த்திக் நரேன் இயக்கத்தில், தனுஷ் நடிக்கவிருக்கும் தனுஷ் 43 படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.