மரணம் அடைந்தாலும் சுஷாந்த் சிங் மறக்கப்படாமல் தொடர்ந்து விவாதப்பொருளாக மாறி இருக்கிறார்.
பாலிவுட்டில் நெபோடிசம் பற்றி பரபரப்பு விவாதங்கள் தொடங்கியுள்ளன. சுஷாந்தின் தற்கொலை தொடர்பாக சுமார் 38 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங், பாட்னாவில் நடிகை சுசாந்தின் காதலி ரியா சக்கரவர்த்தி மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் பரபரப்பு புகார் கொடுதிருக்கிறார்.
இது குறித்து விசாரணை மேற்கொள்ள பீகார் போலீசார், ஐபிஎஸ் அதிகாரி வினய் திவாரி தலைமையில் மும்பை வந்துள்ளனர்.
அவர்களுக்குச் சரியான ஒத்துழைப்பு கொடுக்காத மும்பை போலீசார், வினய் திவாரிக்கு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான மெஸ்சில் தங்குவதற்கான இடமும் ஒதுக்கவில்லை என்று பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்து பரபரப்பு தகவல்களை தெரிவித்து வரும் நடிகை கங்கனா மும்பை போலீசாரை கடுமையாகச் சாடி,தனது டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.
‘இது என்ன குண்டர்கள் ராஜ்யமா? சுஷாந்த் சிங்கை கொன்ற குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், எந்த ‘அவுட்சைடரும்’ மும்பையில் பாதுகாப்பாக இருக்க முடியாது. குற்றவாளிகள் மேலும் அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டே இருப்பார்கள். தயவு செய்து இந்த விவகாரத்தில் தலையிடுங்கள்’ என்று கூறியுள்ளவர் இதை பிரதமர் மோடிக்கும் டேக் செய்துள்ளார்.
கங்கனா ரனவத்தின் இந்த ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.