இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில் அருண்விஜய் நடித்து வரும் புதிய படம் ’சினம்’.
லாக்டவுனுக்கு முன்பே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில்,ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் தொடங்கி நடந்து வந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணி தற்போது பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதில், நடிகர்கள் அருண்விஜய், விஜயகுமார், இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அருண்விஜய் நடித்த காட்சிகளுக்கு டப்பிங் பேசினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அருண்விஜய் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அருண்விஜய் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள இப் படத்தில் அவருக்கு ஜோடியாக பல்லக் லால்வானி நடித்துள்ளார். லாக்டவுன் முடிந்ததும் இந்த படம் வெளியாகும் என்கிறது படக்குழு.