நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து ‘தல’ அஜித்,மீண்டும் தயாரிப்பாளர் போனி கபூர் ,இயக்குநர் எச். வினோத் கூட்டணியில் உருவாகி வரும் வலிமை.படத்த்தில் நடித்து வருகிறார்.
அஜித் காவல் துறை அதிகாரியாக நடித்து வரும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடித்து வருகிறார்.
இவர்களுடன், வில்லன் கதாபாத்திரங்களில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா உள்பட 3 பிரபல நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.
கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்க பட்டுள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கொரனா வைரசின் தாக்கம் முழுமையாக குறைந்த பிறகு தான் தொடங்கும் என்று படத்தின் தயாரிப்பாளர் அறிவித்து இருந்த நிலையில்,தற்போது வரும் நவம்பர் மாதம் வலிமை படத்தின் படப்பிடிப்பு தொடங்கி அடுத்த ஆண்டு 2021 மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளதாக்க தெரியவருகிறது.
.இப்படத்தை வரும் 2021 கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக எந்த நாட்டு கொரோனா தடுப்பூசி முதலில் பயன் பாட்டுக்கு வந்தாலும், வலிமை படக்குழுவினருக்கு இலவசமாக வழங்க ‘தல’அஜித் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.