பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் இளைய நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதுதான் நடிகர் விஷால் தொற்றிலிருந்து விடுபட்டிருக்கிறார். கோடம்பாக்கத்தை விட்டு கொரானா கொள்ளை நோய் முற்றிலுமாக எப்போது விடை பெறுமோ தெரியவில்லை.
சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாடகர் பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரானா பாடல் பாடியதற்கு பரிசோ என்னவோ.!
திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அவர்கள் பூரண நலமடைந்து வீடு திரும்ப வேண்டுமென வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.