இந்தியன் 2 படப்பிடிப்பில் வினாடி நேரம் பின்தங்கியிருந்தால் உலகநாயகன் கமல்ஹாசன் ,இயக்குநர் ஷங்கர் இருவருமே பலியாகி இருப்பார்கள்.
கிரேன் விழுந்ததில் 3 முக்கிய திறமைசாலிகள் உயிர் இழந்தார்கள் .கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகனும் அதில் ஒருவர். மற்றும் ஒருவர் காயம் அடைந்தார் .அவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக தொழில்துறை ஆணையர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்து வந்தது.
இந்த பேச்சில் பெப்சி யூனியன் பிரதிநிதி ,லைகா நிறுவனப்பிரதிநிதி ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். இன்று இழப்பீடு தொகையை வழங்க லைகா நிறுவனம் முன் வந்திருந்தது.
காயம் அடைந்தவர் உள்பட உயிர் இழந்த மூவர் குடும்பத்துக்கும் சேர்த்து தலா ஒரு கோடி வீதம் வழங்க ஒப்புக்கொண்டதால் பேச்சு வார்த்தை நல்லவிதமாகவே முடிந்திருக்கிறது.
உலகநாயகன் கமல்ஹாசன் ,இயக்குநர் ஷங்கர் ,பெப்சி தலைவர் செல்வமணி ஆகியோர் முன்னிலையில் நிதி வழங்கப்பட்டது.