மங்காத்தா 2 வருமா?
தல அஜித் ரசிகர்களின் பிரமாண்ட ஆதரவினை மங்காத்தா பெற்று பெரிய வெற்றியை அடைந்தது. திரிஷா ,பிரேம்ஜி அமரன் ,ராய் லட்சுமி அஞ்சலி ,வைபவ் ரெட்டி ஆகியோரும் நடித்திருந்தார்கள் .
மகத்தான வெற்றியை பெற்றதும் மங்காத்தா 2 பற்றிய பேச்சு எழுந்தது.
இது பற்றி இயக்குநர் வெங்கட்பிரபு தற்போது என்ன சொல்கிறார்?
“தல அஜித் இப்போது வலிமை படம் பண்ணிக்கொண்டிருக்கிறார். நான் சிம்பு நடிக்கும் மாநாடு பண்ணிக்கொண்டிருக்கிறேன்.
அஜித்சார் ஒரு கொள்கையை அழுத்தமுடன் பின்பற்றி வருகிறார். ஒரு படத்தை முடிக்காமல் மற்றொரு படத்தைப்பற்றி எந்த முடிவும் சொல்ல மாட்டார் . மங்காத்தா 2 வருமா வராதா என்பதைப் பற்றி அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.அது அவரது முடிவு. “என்கிறார் வெங்கட் பிரபு.